/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிநீர் வழங்காததை கண்டித்து மடுகரையில் பெண்கள் சாலை மறியல்
/
குடிநீர் வழங்காததை கண்டித்து மடுகரையில் பெண்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்காததை கண்டித்து மடுகரையில் பெண்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்காததை கண்டித்து மடுகரையில் பெண்கள் சாலை மறியல்
ADDED : அக் 15, 2024 06:33 AM

நெட்டப்பாக்கம்: மடுகரையில் குடிநீர் வராததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் மடுகரை-புதுச்சேரி 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை மூகாம்பிகை நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. பொறுமை இழந்த அப்பகுதி பெண்கள்நேற்று காலை 7 மணிக்கு காலி குடங்களுடன் மடுகரை-புதுச்சேரி சாலையில்மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வர வேண்டும் என கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து பொதுப்பணித்துறை இளநிலைபொறியாளர் திருவேங்கடம் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் 20 நாட்களுக்குள் குடிநீர் பிரச்னையை சரிசெய்து தருவதாக உத்திரவாதம் அளித்தார். அதையேற்றுசாலை மறியலில் ஈடுபட்டஅனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் மடுகரை-புதுச்சேரி சாலையில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.