/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருநள்ளார் ஆதீனத்தில் மாகேஸ்வர பூஜை
/
திருநள்ளார் ஆதீனத்தில் மாகேஸ்வர பூஜை
ADDED : அக் 20, 2025 12:29 AM

காரைக்கால்: திருநள்ளாரில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை சுவாமிநாதத் தம்பிரான் சாமியின் 29ம் ஆண்டு மாகேஸ்வர பூஜை நடந்தது.
காரைக்கால், திருநள்ளாரில் தருமபுர ஆதீனத்திற்கு கீழ் தர்பாரண்யேஸ்வர கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணையாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகளின் முத்தி தினத்தையொட்டி, நேற்று திருநள்ளார் தெற்கு வீதியில் உள்ள நினைவிடத்தில் 29வது ஆண்டு மாகேஸ்வர பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மாக அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை நடந்தது.
விழாவில் மாகேஸ்வர பூஜை விழா மலர் வெளியிடப்பட்டது. வளர்கல்வி மையப் பொறுப்பாளர் முத்துவேல் பிள்ளை, முன்னாள் கொம்யூன் பஞ்சாயத்து தலைவர் சிங்கரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.