/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாகி ஆயுர்வேத கல்லுாரி பயிற்சி மாணவர்கள் போராட்டம்
/
மாகி ஆயுர்வேத கல்லுாரி பயிற்சி மாணவர்கள் போராட்டம்
மாகி ஆயுர்வேத கல்லுாரி பயிற்சி மாணவர்கள் போராட்டம்
மாகி ஆயுர்வேத கல்லுாரி பயிற்சி மாணவர்கள் போராட்டம்
ADDED : பிப் 13, 2024 05:12 AM
புதுச்சேரி: மாகி ராஜிவ்காந்தி ஆயுர்வேத கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பயிற்சி தொகையை உயர்த்ததர கோரி கோஷங்களை எழுப்பினர். கல்லுாரி அதிகாரிகள் மாணவர்களை சமாதானப்படுத்தினர்.
முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பயிற்சி தொகை உயர்த்தி தரப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
மாணவர்கள் கூறும்போது, பயிற்சி மருத்துவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த ஊக்கத் தொகையை 20 ஆயிரமாக உயர்த்தி தரப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
அதன்படி எம்.பி.பி.எஸ்., பயிலும் பயிற்சி மாணவர்களுக்கு உயர்த்தி தரப்பட்டது. ஆனால் எங்களுக்கு உயர்த்தி தரப்படவில்லை.
இவ்விஷயத்தில் முதல் வர் தலையிட்டு பயிற்சி தொகையை 20 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என்றனர்.