காது கேளாதோர் பிரீமியர் லீக் போட்டி மாகி கிரிக்கெட் அணி சாம்பியன்
காது கேளாதோர் பிரீமியர் லீக் போட்டி மாகி கிரிக்கெட் அணி சாம்பியன்
ADDED : ஜூலை 02, 2026 01:49 AM

காது கேளாதோர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மாகி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கவுன்சில் சார்பில், முதலாவது பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி சேதராப்பட்டு சி.ஏ.பி., மைதானத்தில் நடந்தது.
சட்ட ஆலோசகர் சரவணன் துவக்க உரையாற்றினார்.
புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மயங்க் மேத்தா கிரிக்கெட்போட்டியை துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக கார்த்திகேயன் எம்.எல்.ஏ., யுக்டோ அறக்கட்டளை நிர்வாகி சதீஷ்குமார், ரோட்டரி ஆப் பாண்டிச்சேரி பீச் டவுன் தலைவர் செல்வகுமார், செயலாளர் திருநாவுக்கரசு, ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பீனிக்ஸ் நிர்வாகி ராஜபிரபாகரன், ஈட்டன் பவர் குவாலிட்டி நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு இயக்குநர் ஜோசப் வில்சன் வாழ்த்தி பேசினர்.
தொடர்ந்து நடந்த கிரிக்கெட் போட்டியில் நான்கு பிராந்திய அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் புதுச்சேரியும் மாகியும் மோதின.
டாஸ் வென்ற மாகி அணி முதலில் பேட் செய்தது.
30 ஓவர்கள் போட்டியில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.
அடுத்து களம் இறங்கிய புதுச்சேரி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
மாகி அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. அந்த அணியின் மகாதேவன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அகில இந்திய காதுகேளாதோர் விளையாட்டு கவுன்சிலின் நிர்வாக குழு உறுப்பினர் பசீத், தொடரின் போட்டிச செயலாளர் சாத்தியபுவனம், அய்யப்பன், மதன்மோகன், ஹபில்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
