/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மயிலம் சுப்ரமணிய சுவாமிக்கு சாரம் கோவிலில் மகா அபிேஷகம்
/
மயிலம் சுப்ரமணிய சுவாமிக்கு சாரம் கோவிலில் மகா அபிேஷகம்
மயிலம் சுப்ரமணிய சுவாமிக்கு சாரம் கோவிலில் மகா அபிேஷகம்
மயிலம் சுப்ரமணிய சுவாமிக்கு சாரம் கோவிலில் மகா அபிேஷகம்
ADDED : பிப் 20, 2024 02:48 AM
புதுச்சேரி : தீர்த்தவாரிக்காக புதுச்சேரிக்கு வருகின்ற மயிலம் சுப்ரமணிய சுவாமிக்கு, சாரம் முருகர் கோவிலில் மகா அபிேஷகம் நடக்கிறது.
மாசிமக கடல் தீர்த்தவாரிக்காக மயிலம் சுப்ரமணிய சுவாமி ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரிக்கு எழுந்தருள்வது வழக்கம். நடப்பு ஆண்டில் மாசிமக உற்சவம் வரும் 24ம் தேதி நடக்கிறது.
இதற்காக, புதுச்சேரிக்கு வரும் 23ம் தேதியன்று வரும் மயிலம் சுப்ரமணிய சுவாமிக்கு, அன்றைய தினம் மாலை 4:00 மணிக்கு, சாரம் முருகர் கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டு, மகா அபிேஷகம் நடக்கிறது.பின், சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சாரம் பகுதியில் வீதியுலா நடக்கிறது.
தீர்த்தவாரி முடிந்து மயிலம் திரும்பும் சுவாமிக்கு, 28ம் தேதியன்று காலை 8:00 மணியளவில் மகா அபிேஷகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. பின், சுப்ரமணிய சுவாமி மயிலத்துக்கு புறப்படாகிறார்.
விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன் மற்றும் உபயதாரர்கள், ஆலய அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

