ஒதியம்பட்டு சித்தர் பீடத்தில் மகா குரு பூஜை விழா
ஒதியம்பட்டு சித்தர் பீடத்தில் மகா குரு பூஜை விழா
ADDED : ஏப் 20, 2026 11:12 PM

வில்லியனுார்: ஒதியம்பட்டு வண்ணார பரதேஸ்வர சுவாமி சித்தர் பீடத்தில் மகா குரு பூஜை விழா நேற்று நடந்தது.
வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு பகுதியில் அமைந்துள்ள சற்குரு வண்ணார பரதேஸ்வர சுவாமி, சித்தர் பீடத்தில் 234ம் ஆண்டு மகா குரு பூஜை விழா கடந்த 19ம் தேதி கோ பூஜை, 5:00 மணியளவில் கணபதி ேஹாமம், 108 சங்கு அபிேஷகத்துடன் துவங்கியது.
நேற்று நடந்த குருபூஜை விழாவில், காலை 7:00 மணியளவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணத்துடன் துவங்கியது. காலை 8:30 மணியளவில் சிவ சஞ்சிவி ராஜலட்சுமி மற்றும் சைவ சித்தாந்த மெய்யண்பர்கள் சார்பில், திருவாசகம் மற்றும் திருமுறை ஓதல் நிகழ்ச்சி நடந்தது.
காலை 9:00 மணியளவில் சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து பால்குடம் மற்றும் புனித நீர் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து ஜீவ பீடத்தில் சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 10:00 மணியளவில் ஆன்மிக சொற்பொழிவு, மாலை 5:30 மணியளவில் திருவிளக்கு பூஜை, இரவு 8:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர், கிராம மக்கள் செய்தனர்.
