/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம்
/
கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 06, 2025 07:04 AM

புதுச்சேரி; சாரம், கெங்கைமுத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
புதுச்சேரி சாரத்தில் அமைந்துள்ள கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிேஷகம் நடைபெற்றது. இதற்கான பூஜை கடந்த 1ம் தேதி மகா கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. மறுநாள் 2ம் தேதி நவக்கிரக ேஹாமம், மிருச்சாங் கிரஹணம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, தீபாராதனை நடந்தது.
கடந்த 3ம் தேதி மாலை யாகசாலை பூஜை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானத்தை தொடர்ந்து கடம் புறப்பாடாகி கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து பால விநாயகர், பாலமுருகன் மற்றும் மூலஸ்தானங்களுக்கு மகா கும்பாபிேஷகம், மகா அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு மின் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இன்று மாலை முதல் 48 நாட்களுக்கு மண்டலாபிேஷக பூஜை நடக்கிறது.
கும்பாபிேஷக ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் இளையபெருமாள், அறங்காவல் குழு தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். பூஜைகளை கோவில் அர்ச்சகர்கள் அய்யப்பன் சிவாச்சாரியார், செந்தில்குமார் சிவாச்சாராயர் ஆகியோர் செய்தனர்.