தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முதலியார்பேட்டை பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 

முதலியார்பேட்டை பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 

முதலியார்பேட்டை பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 


ADDED : மார் 23, 2026 10:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 10:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டை, வரதராஜ பெருமாள் கோவிலில் 25ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

புதுச்சேரி, முதலியார்பேட்டை, கடலுார் மெயின் ரோட்டில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நாளை (25ம் தேதி) காலை நடக்கிறது.

இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை யஜமான சங்கல்பம், ஆசார்ய வரணம், ரித்வித் வரணம், விஷ்வக்ேஸன ஆராதனம், புண்யாஹவாசனம், ஸோமகும்ப ஸ்தாபனம், வேத பிரபந்த துவக்கம், அங்குரார்பணம், வாஸ்து சாந்தி நடந்தது.

தொடர்ந்து, நேற்று (23ம் தேதி )காலை தீர்த்த ஸங்ரஹம், ரக்ஷாபந்தனம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், பூர்ணாஹீதி, சாற்றுமுறை, ஜலாதிவாஸம், விமான சாயதிவாஸம், மனோன்மானசாந்தி ஹோமம், மாலை நேத்ரோன்மீலணம், கர்மாங்க திருமஞ்சனம், சதுஸ்தானார்சனம், பூர்ணாஹீதி, சாற்றுமறை நடந்தது.

இன்று (24ம் தேதி) காலை 8 மணிக்கு சதுஸ்தானார்சனம், ஹோமம், பூர்ணாஹூதி சாற்றுமுறை, மூலவர்கள் திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு சதுஸ்தானார்சனம், தத்வ ஹோமம், நியாசம், சாற்றுமுறை நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக, நாளை (25ம் தேதி )காலை 5 மணிக்கு விஷ்வரூபம், சதுஸ்தானார்சனம், மகா பூர்ணாஹூதி, தசதானம், கலசங்கள் புறப்பாடு, காலை 10 மணிக்கு விமானங்கள் கும்பாபிஷேகம், 10:30 மணிக்கு பெருமாள், தாயார் லஷ்மி ஹயக்ரீவர் மற்றும் சீதா லக்ஷ்மண ஹனுமத் சமேத ராமச்சந்திர சுவாமி ஆகியோருக்கு கும்பாபிஷேகம், மகா தீபாராதனை, பெரிய சாற்று முறை நடக்கிறது. மாலை கருட சேவை புறப்பாடு நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கவுரவ தர்மகர்தாவும், புதுச்சேரி பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருமான ராமகிருஷ்ணன், பொதுப்பணித்துறை கிளாஸ் - 1 ஒப்பந்ததாரர ரமேஷ் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us