/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓம்சக்தி எல்லையம்மன் கோவிலில் மகா கும்பாபிேஷகம்
/
ஓம்சக்தி எல்லையம்மன் கோவிலில் மகா கும்பாபிேஷகம்
ADDED : ஜூலை 08, 2025 12:17 AM

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம், அம்மன் நகரில் அமைந்துள்ள ஓம்சக்தி எல்லையம்மன் கோவிலில் மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம், அம்மன் நகரில் வேம்படி ஓம்சக்தி எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிேஷகம் நேற்று முன்தினம் துவங்கியது.
இதையொட்டி, அன்று காலை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், பூர்ணா ஹூதி, தீபாராதனை, யாக பிரவேசம், முதல்கால யாக சாலை பூஜை ஹோமம் நடந்தது.
முக்கிய நிகழ்வாக நேற்று காலை, இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூல மந்திர ஹோமம், மகா பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து, ஓம்சக்தி எல்லையம்மனுக்கு மகா கும்பாபிேஷகம் செய்யப்பட்டு, புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில், அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாலை, அஸ்வத்த விருக்ஷ விவாஹம் என்கிற அரசமர திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்மன் சிறப்பு மின் அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று (8ம் தேதி) முதல் மண்டல அபிேஷகம் துவங்குகிறது.