/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோமாதா ஆலயத்தில் 2ம் தேதி மகாளய அமாவாசை
/
கோமாதா ஆலயத்தில் 2ம் தேதி மகாளய அமாவாசை
ADDED : செப் 29, 2024 06:05 AM
புதுச்சேரி : கருவடிக்குப்பம், கோமாதா ஆலயத்தில், மகாளய அமாவாசையை முன்னிட்டு வரும் அக்., 2ம் தேதி சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோமாதா ஆலய ராஜா சாஸ்திரி கூறிய தாவது:
மகாளயபட்சம் ஆரம்பத்தில் இருந்து, மகாளய அமாவாசை முடிய உள்ள, 15 நாட்கள் மகாளய புண்ணிய காலமாகும். இந்த நாட்களில், நம் மீது அன்பு, பாசம் காட்டி வளர்த்து நமக்காக பல தியாகங்கள் செய்த முன்னோர்களை வணங்க வேண்டும்.
பிறகு தேவதைகள், சூரிய பகவான், தர்மராஜன் அனுமதி பெற்று முன்னோர்கள் பூமியை வந்தடைந்து, மகாளய பட்ச நாட்களாக, 15 நாட்களும் நம்முடன் தங்கி நாம் அளிக்கும் உபசாரங்கள், பூஜைகளை ஏற்று நம்மை ஆசிர்வதிக்கின்றனர்.
இந்த நாட்களில், தங்களது வீட்டில் பூஜை செய்வதை விட, பசுக்கள் நிறைந்த இடத்தில் பூஜை செய்தால் அதிக பலன்களை பெறலாம். அந்த வகையில், மகாளயபட்ச காலம் துவங்கிய கடந்த, 18ம் தேதி முதல் கருவடிக்குப்பம், ஓம் சக்தி நகரில் உள்ள கோமாதா ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
மகாளயபட்சம் நிறைவு பெறும் அமாவாசை தினமான வரும் அக்., 2ம் தேதி காலை முதல் கோமாதா கோவிலில், கோ பூஜை, முன்னோர்கள் வழிபாடு, தர்ப்பணம், சிறப்பு பூஜை ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் விபரங்களுக்கு, 98423-29770, 98423-27791 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.