/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகாராணி அஹில்பாய் ேஹால்கர் பிறந்த நாள்
/
மகாராணி அஹில்பாய் ேஹால்கர் பிறந்த நாள்
ADDED : மே 16, 2025 02:29 AM

புதுச்சேரி: பா.ஜ., தலைமையகத்தில் மகாராணி அஹில்பாய் ேஹால்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
மத்திய இந்தியா, காந்தேஷ், நாசிக், நாகர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியை ஆண்டவர் மகாராணி அஹில்பாய் ஹோல்கர். அவர், வெவ்வேறு கலாசாரத்தினர் இந்தியாவில் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான வழியை கண்டு வாழ்ந்து காட்டியவர்.
இந்நிலையில், புதுச்சேரி பா.ஜ., தலைமையகத்தில் மகாராணி அஹில்பாய் ஹோல்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவர், காசி விசுவநாதர் கோவில் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்ட கோவில்களின் புனரமைப்பு பணியினை மேற்கொண்டது, பின்தங்கிய மக்களுக்காக அவர் அமைத்த தர்மசாலா, அவரது நிர்வாக திறமை நினைவு கூறப்பட்டது.
அத்துடன், பிரதமர் மோடி காசி விசுவநாதர் கோவிலில் மகாராணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவ சிலை திறந்தும் நினைவு கூறப்பட்டது. பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., மாநில துணைத்தலைவர் சிவகுமார், பொதுச் செயலாளர் மவுலிதேவன் அமுதா ராணி, ஹேமா மாலினி பேசினர். மாநில, மாவட்ட தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.