தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மகாவதார் பாபாஜி தியான மண்டபம் திறப்பு விழா 

மகாவதார் பாபாஜி தியான மண்டபம் திறப்பு விழா 

மகாவதார் பாபாஜி தியான மண்டபம் திறப்பு விழா 


ADDED : ஏப் 27, 2026 05:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 05:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்திரையர்பாளையம், ஞானாலயம்- அகத்தியர் கோவிலில் (கல்கி கோவில்) மகாவதார் பாபாஜி தியான மண்டபம் திறப்பு விழா வரும் 1ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரி, முத்திரையர்பாளையம், ஞானாலயம்- அகத்தியர் கோவில்( கல்கி கோவில்) அமைந்துள்ளது. இக்கோவிலில், வரும் 1ம் தேதி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காலை 7 மணிக்கு மகாவதார் பாபாஜி தியான மண்டபம் திறப்பு விழா நடக்கிறது.

இதையொட்டி, நாளை (29ம் தேதி) காலை 7 மணிக்கு மகாவதார் பாபாஜி உருவ சிலை பிரதிஷ்டாபனம் நடக்கிறது. தொடர்ந்து, ஐசன் கண் மருத்துவமனை மூலம் 29 மற்றும் 30ம் தேதி ஆகிய இரண்டு நாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.

கண் பரிசோதனை முகாமில், கணினி மூலம் இலவச கண் பரிசோதனை, தேவை உள்ளவர்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்படும். மேலும், கண்புரை பரிசோதனை மற்றும் கண் பயிற்சிகள் சொல்லித் தரப்படுகிறது.

பின், 30ம் தேதி மாலை 5 மணிக்கு மகாவதார் பாபாஜிக்கு மலர் அர்ச்சனை, மந்திர வேள்வி நடக்கிறது. 1ம் தேதி காலை 7 மணிக்கு உலக நன்மைக்காக 16 முறை புருஷ ஸூக்த பாராயணம் மற்றும் பஞ்சசாந்தி ஹோமம் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் தலைமை நிர்வாகி பாலாஜி ராஜீ தலைமையில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us