/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.40 லட்சம் மோசடிமுக்கிய குற்றவாளி கைது
/
ரூ.40 லட்சம் மோசடிமுக்கிய குற்றவாளி கைது
ADDED : ஆக 13, 2025 05:35 AM
புதுச்சேரி : ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம், மற்றவர் இடத்தை கிரயம் செய்து, ரூ.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, அரும்பார்த்தபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 68; ஒய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு, குயவர்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன், 55, அவரது மனைவி சுமதி ஆகியோர் அறிமுகமாகினர். பின், கடந்த 2024ம் ஆண்டு பாலமுருகன் கடன் சுமை காரணமாக வில்லியனுார் மெயின் ரோட்டில் உள்ள தனது இடத்தை மூர்த்தியிடம் ரூ.40 லட்சத்திற்கு விற்பனை செய்தனர்.
இதையடுத்து, கடந்த ஜூன் 22ம் தேதி பாலமுருகனிடம் இருந்து தான் வாங்கிய இடத்தில் கடை கட்டுவதற்கு மூர்த்தி சென்று பார்வையிட்டபோது, அங்கு வந்த சிலர் இந்த நிலம் எங்களுக்கு சொந்தமானது என தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த மூர்த்தி கிரயம் செய்த பத்திரத்தை ஆய்வு செய்தபோது, போலி என தெரியவந்தது.
இதுகுறித்து மூர்த்தி ரெட்டியார்பாளையம் போலீசில் அளித்த புகாரின் பேரில், பாலமுருகன், 55; அவரது மனைவி சுமதி, மகன்கள் யுவராஜ், கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனர். முக்கிய குற்றவாளியான பாலமுருகனை கைது செய்த போலீசார்,அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.