மலேரியா விழிப்புணர்வு ஓவியப் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
மலேரியா விழிப்புணர்வு ஓவியப் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : ஜூன் 12, 2026 06:16 AM

புதுச்சேரி: தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ், வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மலேரியா எதிர்ப்பு மாதத்தையொட்டி, மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடந்தது.
இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். தொடர்ந்து, பரிசளிப்பு விழா, தலைமை ஆசிரியை செங்கேணியம்மாள் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை, மலேரியா நோயின் அறிகுறிகள், அதற்கான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் முறையான சிகிச்சை முறைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
சுகாதார ஆய்வாளர் இளையதாசன், மலேரியா நோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் குடியிருப்பு பகுதிகளில் கொசுப்புழுக்கள் உருவாவதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
ஓவியப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சுகாதார உதவி ஆய்வாளர்கள் அய்யனார், ரவிச்சந்திரன், விமல், மகப்பேறு செவிலியர் மடோனா, ஆஷா பணியாளர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஓவியப் போட்டியை பொறுப்பாசிரியர் மாலதி ஒருங்கிணைத்தார். ஆசிரியர் நிலவழகன் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை சுகாதார உதவி ஆய்வாளர் கலையரசி செய்திருந்தார்.
சுகாதார பார்வையாளர் தேவி நன்றி கூறினார்.
