/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மேல்நிலைப்பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அரசு மேல்நிலைப்பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு மேல்நிலைப்பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு மேல்நிலைப்பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 28, 2025 12:40 AM
புதுச்சேரி : தானாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி நலவழித்துறை, தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம், தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், சுகாதார மேற்பார்வையாளர் உமா வரவேற்றார்.
மருத்துவ அதிகாரி அஸ்மா தலைமை தாங்கினார். பள்ளி துணை முதல்வர் ராஜசேகர், தலைமையாசிரியர் நுார் முகமது, மருத்துவ அதிகாரி ஷாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ அதிகாரிகள் பேசுகையில், மலேரியா நோய் பரவும் விதம், பாதிப்புகளை தவிர்ப்பது குறித்து விளக்கினர். சுகாதார ஆய்வாளர் லில்லி புஷ்பா மலேரியா நோய் அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்து விளக்கினார்.
மாணவர்கள் மலேரியா ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர்.
மலேரியா விழிப்புணர்வு ஊர்வலத்தை பள்ளி துணை முதல்வர் ராஜசேகர், மருத்துவ அதிகாரி அஸ்மா ஆகியோர் துவக்கி வைத்தனர். பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், நல்லவாடு சாலை வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
ஊர்வலத்தில், மலேரியா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, சுகாதார உதவி ஆய்வாளர்கள் கிருஷ்ணகுமார், இளஞ்செழியன் மற்றும் ஆஷா பணியாளர்கள் செய்திருந்தனர்.