/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தந்தை, மகனை தாக்கி கொலை மிரட்டல் ஒருவர் கைது :8 பேருக்கு போலீஸ் வலை
/
தந்தை, மகனை தாக்கி கொலை மிரட்டல் ஒருவர் கைது :8 பேருக்கு போலீஸ் வலை
தந்தை, மகனை தாக்கி கொலை மிரட்டல் ஒருவர் கைது :8 பேருக்கு போலீஸ் வலை
தந்தை, மகனை தாக்கி கொலை மிரட்டல் ஒருவர் கைது :8 பேருக்கு போலீஸ் வலை
ADDED : நவ 25, 2024 05:07 AM
புதுச்சேரி : முன் விரோதத்தில் தந்தை, மகன்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். 8 பேரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி பூமியான்பேட் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவபெருமாள் 47, டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 11ம் தேதி இவரது மகன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேனர் வைத்தார்.
இதனை அதே பகுதியைச் சேர்ந்த முரளி 39, கிழித்தார். இதுதொடர்பாக இரு தரப்புக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் பூமியான்பேட்டையைச் சேர்ந்த முரளி 39, சாரங்கபாணி 38, அருள்பாண்டி 38, அருள்குமார் 38, சஞ்சய் 38, ரவி 39, சர்வின் 37, விஜயபாரதி 39, கணேஷ் 39, ஆகியோர் வீட்டில் இருந்த சிவபெருமாள், அவரது மனைவி, பிள்ளைகளை சரமரியாக தாக்கி வீட்டில் இருந்த பைக்கை சேதப்படுத்தி, சிவபெருமாள் மகன் சிவபிரகாஷ் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க ஜெயினை அறுத்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பலத்த காயமடைந்த நான்கு பேரும் கதிர்காமம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து முரளியை கைது செய்தனர். 8 பேரை தேடி வருகின்றனர்.
தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்ட அருள்மணி உள்ளிட்ட சிலர் தமிழக வெற்றிக் கழகத்தின் உழவர்கரை தொகுதி பொறுப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.