/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது
/
தனியார் நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது
ADDED : நவ 27, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை : திருபுவனை அடுத்த நல்லுார் குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் அய்ய னார் 31; தனியார் கம்பெனி ஊழியர்.
அதே ஊர் கோவில் திருவிழாவின்போது அய்யனாருக்கும், நல்லுாரை சேர்ந்த மணிகண்டன், 27, என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் உள்ளது.
கடந்த 25ம் தேதி அய்யனார் அருகில் உள்ளகாலி மனையில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அவ்வழியே சென்றமணிகண்டனுக்கும்,அய்யனாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் மணிகண்டன் தாக்கியதில் அய்யனார் காயமடைந்தார்.
புகாரின்பேரில் திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தார்.