/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.சி., சர்வீஸ் கடையை உடைத்து பணம் திருட்டு 50 கடைகளை உடைத்த ஆசாமி கைது
/
ஏ.சி., சர்வீஸ் கடையை உடைத்து பணம் திருட்டு 50 கடைகளை உடைத்த ஆசாமி கைது
ஏ.சி., சர்வீஸ் கடையை உடைத்து பணம் திருட்டு 50 கடைகளை உடைத்த ஆசாமி கைது
ஏ.சி., சர்வீஸ் கடையை உடைத்து பணம் திருட்டு 50 கடைகளை உடைத்த ஆசாமி கைது
ADDED : ஜன 19, 2025 06:12 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏ.சி., சர்வீஸ் கடையை உடைத்து பணம் திருடிய தமிழக ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி தர்மாபுரி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராஜாமுகமது, 49. இவர், நடேசன் நகர், 2வது குறுக்கு தெருவில், ஏ.சி., சர்வீஸ் மற்றும் விற்பனை கடை நடத்தி வருகிறார். கடந்த 5ம் தேதி வழக்கம்போல் கடையை பூட்டி சென்றார். 6ம் தேதி கடையை திறக்க வந்தபோது, அலுவலக கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
அலுவலகத்திற்குள் உள்ள மேசை டிராயர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 19,000 மற்றும் கை கடிகாரம் திருடிச் செல்லப்பட்டு இருந்தது. அலுவலக சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் அலுவலக கதவை உடைத்து உள்ளே புகுந்து, மேஜை டிராயரை திறந்து பணம் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்ததில், திருடியது, அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம், மீன் சுருட்டி அருகில் உள்ள ஓகை கிராமம், முத்து சேர்வை மடம் வீதியைச் சேர்ந்த ரவிக்குமார் (எ) ஓகை குமார், 68, என, தெரியவந்தது.
ஓகை குமார் மீது புதுச்சேரியில் 15க்கும் மேற்பட்ட கடை உடைத்து திருட்டு, கோவில் உடைத்து திருட்டு, வீடு புகுந்து திருடிய வழக்குகள் உள்ளது. இதுதவிர தமிழகத்தில் கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது.