sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் கைது

நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் கைது

நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் கைது


ADDED : ஜன 29, 2025 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2025 05:49 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார் : வில்லியனுார் அருகே முன்விரோதம் காரணமாக கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு தயாரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார் அடுத்த பொறையூர்பேட் புதுநகரை சேர்ந்தவர் குருபஞ்சராவ் மகன் யோகேஷ் (எ) யோகரத்தினம், 21. இவர் மீது கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி முகேஷிற்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன், கிராத்திற்கு செல்லும் சாலையில் முகேஷ் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த யோகரத்தினத்தை நிறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டி, வெடிகுண்டு வீசி கொலை செய்துவிடுவோம் என மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த யோகரத்தினம் பட்டாசு வாங்கிவந்து யூடிப் சேனல் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்து, அதனை தனது எதிரி முகேஷ், வீட்டின் சுவற்றில் வீசி வெடிக்க செய்து பரிசோதித்தார்.

தகவலறிந்த புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ் மற்றும் பேரோஜான் ஆகியோர் தலைமையிலான போலீசார், பொறையூர் கிராமத்தில் ரகசியமாக கண்காணித்து ஒரு வீட்டில் பதுங்கி இருந்த யோகரத்தினத்தை நேற்று முன்தினம் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க வைத்திருந்த வெடிமருந்து, நுால் உருண்டை, கூழாங்கல், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, வில்லியனுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். யோகரத்தினம் மீது வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us