தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காட்டேரிக்குப்பத்தில் கஞ்சா விற்றவர் கைது

 காட்டேரிக்குப்பத்தில் கஞ்சா விற்றவர் கைது

 காட்டேரிக்குப்பத்தில் கஞ்சா விற்றவர் கைது


ADDED : ஏப் 21, 2026 06:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 06:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காட்டேரிக்குப்பத்தில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். காட்டேரிக்குப்பம் - வழுதாவூர் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வாலிபர் ஒருவர், மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் வந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அதில், 100 கிராம் கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்திருந்தார். பின், அவரை ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், சுத்துக்கேணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூபாலன் மகன் சாரதி, 23; என்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்த 100 கிராம கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us