/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதியவர் வீட்டில் நகை திருடியவர் கைது
/
முதியவர் வீட்டில் நகை திருடியவர் கைது
ADDED : பிப் 15, 2025 07:15 AM
புதுச்சேரி: கொசப்பாளையம், சுந்தரம் மேஸ்திரி வீதியை சேர்ந்தவர் கோதண்டபாணி, 82. இவர் சமீபத்தில் வீட்டிற்கு கடந்த 12ம் தேதி புதிய வாஷிங் மிஷின் ஒன்று வாங்கியிருந்தார். அது பழுதானது. உடனே அவர் வாஷிங் மிஷின் வாங்கிய கடையை தொடர்பு கொண்டு, அதனை பழுதுநீக்கித் தர ஊழியரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதன்படி கடையில் இருந்து பழுது நீக்க ஊழியர் அனுப்பி வைக்கட்டார். அந்த ஊழியர் வந்து சென்ற, பின், அவரின் வீட்டின் பூஜை அறையில் இருந்த 3 சவரன் வளையல் மாயமாகி இருந்தது.
சந்தேகமடைந்த கோதண்டபாணி பழுது நீக்கும் ஊழியரிடம் விசாரித்தார். அவர், நகை எடுக்கவில்லை என மறுத்துவிட்டார்.
இது குறித்து கோதண்டபாணி உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப் பதிந்து, அந்த ஊழியரை பிடித்து விசாரித்தனர். அவர் முத்தியால்பேட்டை, பொன்னியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பிரதீப், 28, என்பதும், நகையை திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசாரை கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.

