/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக் பெட்டியில் இருந்த நகை திருடியவர் கைது
/
பைக் பெட்டியில் இருந்த நகை திருடியவர் கைது
ADDED : நவ 30, 2024 06:35 AM
சின்னசேலம் : மேலுார் கிராமத்தில் பைக் பெட்டியில் வைத்திருந்த நகைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த எரவார் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன், 45; இவர் கடந்த 27ம் தேதி மேலுார் கிராமத்தில் நடந்த தனது தங்கை மகளின் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்க சென்றுள்ளார்.
அப்போது தனது பைக் பெட்டியில் 2 சவரன் தங்க நகைகளை வைத்துச் சென்றார். நிகழ்ச்சி முடிந்து வந்து பார்த்த போது பைக் பெட்டி உடைக்கப்பட்டு நகை திருடு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சின்னலேசம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், ஈரோடு மாவட்டத்தில் பதுங்கியிருந்த பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த காட்டான் மகன் பெரியசாமி, 20; என்பவரை நேற்று கைது செய்தனர்.

