/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
ADDED : மே 06, 2025 04:55 AM
புதுச்சேரி: சண்முகாபுரத்தில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சண்முகாபுரம் அண்ணா வீதி, அங்கன்வாடி மையம் அருகே வாலிபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக தகவல் வந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதை கண்ட அந்த நபர், அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, ோலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், சண்முகாபுரம், அண்ணா வீதியை சேர்ந்த சீனிவாசன் மகன் தட்சிணாமூர்த்தி, 20; என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து தட்சிணாமூர்த்தியை கைது செய்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.