ADDED : நவ 06, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் நேற்று (நவ.,5) மாலை இ.சி.ஆர்., லெனின் நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்த நபர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினர். அவர், லாஸ்பேட்டை முருகன் மகன் சந்தோஷ், 24, என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் கத்தியை பறிமுதல் செய்தனர்.
