/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
/
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : செப் 28, 2025 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி,: எல்லைப்பிள்ளைசாவடியை சேர்ந்தவர் துரை இவருக்கு சொந்தமான கடை அதே பகுதி 100 அடி சாலையில் உள்ளது.
கடையின் பின்புறத்தில் உ ள்ள இடம் தொடர்பாக, துரைக்கும், அதே பகுதி யை சேர்ந்த சித்ராவிற்கும் பிரச்னை ஏற்பட்டு துரை கொலை செய்யப்பட்டார்.
இப்பிரச்னை தொடர் பாக கடந்த 25ம் தேதி, கடையில் இருந்த துரையின் மனைவி ரேகாவை, சித்ராவின் மகள் திவ்யபாரதி, ரெட்டியார்பாளையம் புதுநகரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 3 பேரும், சேர்ந்து, இந்த இடத்தை விட்டு போகவில்லை என்றால், உன் கணவர் நிலைதான் உணக்கும் என கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து மணிகண் டனை கைது செய்தனர்.