தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மதுபான கூடத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

மதுபான கூடத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

மதுபான கூடத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது


ADDED : அக் 16, 2024 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2024 01:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்:புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த பங்கூர் பகுதியில் மதுபான கூடம் செயல்படுகிறது. நேற்று முன்தினம் காலையில், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மது குடிக்க வந்தார்.

மாலையில், தான் வைத்திருந்த பணம் தீர்ந்து விட்டதால், கேஷியரிடம் கடனாக ஒரு பீர் பாட்டில் கேட்டார். அவர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த வாலிபர் வெளியே சென்று, மீண்டும் மாலை 6:30 மணிக்கு அங்கு வந்து, பெட்ரோல் குண்டை வீசி

தப்பினார்.

இதில், மதுபான கூடத்தின் கண்ணாடி உடைந்தது. பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் அங்கிருந்த ஊழியர்கள், குடி பிரியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். தகவல் அறிந்த வில்லியனுார் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

பெட்ரோல் குண்டு வீசியவர் பங்கூர் பேட் பகுதியை சேர்ந்த அருண்ராஜ், 25, என்பதும், இவர் சமையல்காரராக வேலை செய்வதும் தெரிந்தது. அவரை கைது செய்துள்ள போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us