/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீயணைப்பு நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் பதட்டம் அடைவதை கண்டு ரசித்த நபர் கைது
/
தீயணைப்பு நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் பதட்டம் அடைவதை கண்டு ரசித்த நபர் கைது
தீயணைப்பு நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் பதட்டம் அடைவதை கண்டு ரசித்த நபர் கைது
தீயணைப்பு நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் பதட்டம் அடைவதை கண்டு ரசித்த நபர் கைது
ADDED : ஏப் 15, 2025 04:37 AM
புதுச்சேரி: புதுச்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தீயணைப்பு நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் வந்து தீயணைப்பு நிலைய அலுவலகம், தீயணைப்பு வண்டி, அறைகள் உள்ளிட்ட அந்த பகுதியில் சோதனையிட்டனர்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில், வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இதனால், வெடி குண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. தீயணைப்பு துறைக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து, ஒதியஞ்சாலை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தீயணைப்பு நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் முத்திரையார்பாளையம் கோவிந்தம்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன், 49; என்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், வெங்கடேசனை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், வெங்கடேசன் முக்கிய அரசு அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதும், அதன் மூலம் அவர்கள் பதட்டம் அடைவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தும் வந்துள்ளார். அதற்காகவே, நேற்று முன்தினம் தீயணைப்பு நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதே போல், இவர் கடந்த காலங்களில் தனது மொபைல் எண்ணில் இருந்தே பல்வேறு அரசு அலுவலகங்களை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, வெங்கடேசனை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் புதுச்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, கைது செய்யப்பட்ட வெங்கடேசன் மீது, இதுபோன்று விழுப்புரம் அடுத்த காணை பகுதியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.