/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் மது குடித்ததை தட்டி கேட்ட நபர் மீது தாக்குதல்
/
பொது இடத்தில் மது குடித்ததை தட்டி கேட்ட நபர் மீது தாக்குதல்
பொது இடத்தில் மது குடித்ததை தட்டி கேட்ட நபர் மீது தாக்குதல்
பொது இடத்தில் மது குடித்ததை தட்டி கேட்ட நபர் மீது தாக்குதல்
ADDED : மார் 07, 2026 04:49 AM
பாகூர்: பாகூரை அடுத்த சோரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன், 38. இவர், நேற்று முன்தினம் மாலை சோரியாங்குப்பம் நவாத்தோப்பு பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அங்கு ஒரு ஆட்டோவில் அமர்ந்து கொண்டு இரண்டு பேர் மது குடித்து கொண்டிருந்தனர்.
அ தனை கண்ட முத்துக்குமரன், அவர்களிடம், ஏன் பொது இடத்தில் மது குடிக்கிறீர்கள் என, கண்டித்தார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த அவர்கள், முத்துக்குமரனை பீர் பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த அவர் பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் அளித்த புகாரின் பேரில், கடலுார் சாவடியை சேர்ந்த கார்த்தி, சங்கர் ஆகியோர் மீது பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வரு கின்றனர்.