/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிகரெட் வாங்கி தர மறுத்தவர் மீது தாக்குதல்
/
சிகரெட் வாங்கி தர மறுத்தவர் மீது தாக்குதல்
ADDED : ஜன 29, 2025 05:41 AM
புதுச்சேரி : சிகரெட் வாங்கி தர மறுத்தவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், 23. இவர் நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர். இவர் கடந்த 26ம் தேதி காலை தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகில் பைக்கை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். மாலை பைக்கை எடுக்க பாலமுருகன் வந்தார்.
அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் பாலமுருகனிடம் சிகரெட் வாங்கித்தர கூறினார். அதற்கு பாலமுருகன் மறுக்கவே, அந்த நபர் இரும்பு பைப்பால் பாலமுருகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
பாலமுருகன் புகாரின் பேரில், தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.