புதுச்சேரியில் இருசக்கர வாகன ேஷாருமில் ரூ.16.70 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
புதுச்சேரியில் இருசக்கர வாகன ேஷாருமில் ரூ.16.70 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
ADDED : செப் 26, 2026 08:22 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள இருசக்கர ேஷாருமில் ரூ. 16.70 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, சுந்தர்ராஜா நகரில் தனியார் இரு சக்கர வாகன ேஷாரும் உள்ளது. இந்த நிறுவனத்தில் பூமியான்பேட் பகுதியை சேர்ந்த ஹரிஹரன், 40, என்பவர் விற்பனையளராக பணிபுரிந்து வந்தார்.
அவர் வாடிக்கையாளர்களிடமிருந்து வாகன விற்பனை தொகை, முன்பணம், வசூல் தொகைள் மற்றும் நிறுவனத்தின் கணக்குகள், அலுவலக ஆவணங்களை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் நிறுவனத்தின் கணக்குகள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்தபோது, ஹரிஹரன் வசூலித்து பணம் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
மேலும், வாடிக்கையாளருக்கு நிறுவனத்தின் பணம் பெற்றுக்கொண்டதற்கான அதிகாரப்பூர்வ அசல் ரசீது வழங்கியுள்ளார். இதையடுத்து, நிறுவன ஊழியர்கள், ஹரிஹரனிடம் விசாரித்தபோது, ரூ.16.70 லட்சம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. பின் கையாடல் செய்த பணத்தை விரைவில் கொடுப்பதாக ஹரிஹரன் தெரிவித்தார்.
ஆனால், இதுவரை பணத்தை திருப்பி செலுத்தாததால் இது குறித்து தனியார் நிறுவன உதவி பொதுமேலாளர் லோகேஷ்வர் உருளையன்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஹரிஹரன் மீது போலீசார் மோசடி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
