/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்கூட்டியில் இருந்து விழுந்தவர் பலி
/
ஸ்கூட்டியில் இருந்து விழுந்தவர் பலி
ADDED : மே 02, 2025 04:59 AM
புதுச்சேரி: பாக்கமுடையான்பேட்டில் ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்தவர் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார்.
வில்லியனுார், மணவெளி ஸ்ரீவாரி கார்டன், முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரநாத், 35. இவர் கடந்த 29ம் தேதி பாக்கமுடையன்பேட், முல்லை வீதியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு மனைவி பிரியாவுடன் சென்று தங்கியுள்ளார்.
பின்னர், மறுநாள் 30 ம் தேதி காலை மணவெளியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக, மனைவியுடன் சந்திரநாத் ஸ்கூட்டியில், பாக்கமுடையன்பேட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
அப்போது, சிறிது துாரம் சென்ற நிலையில், திடீரென சந்திரநாத் மயக்கம் அடைந்து ஸ்கூட்டியுடன் கீழே விழுந்துள்ளார். இதில், தலையில் படுகாயமடைந்த சந்திரநாத்தை, உடனிருந்த மனைவி பிரியா மீட்டு, லாஸ்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டபின், மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, டாக்டர் பரிசோதனை செய்ததில், சந்திரநாத் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பிரியா அளித்த புகாரின் பேரில், வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

