/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண் டாக்டரை சீண்டிய மர்ம நபருக்கு வலை
/
பெண் டாக்டரை சீண்டிய மர்ம நபருக்கு வலை
ADDED : ஆக 06, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூர் பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர், தனது கணவருடன் கடந்த 4ம் தேதி இரவு புதுச்சேரியில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். கிருமாம்பாக்கம் அடுத்த சார்காசிமேடு சாலையில் சென்றபோது, அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர், பெண் மருத்துவரின் மீது கை வைத்து சீண்டி உள்ளார். அதிர்ச்சியடைந்த அவர்கள், மர்ம நபரை பிடிக்க முயன்றனர்.
ஆனால், அவர் யு டர்ன் அடித்து அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து அவர், கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.