ADDED : அக் 22, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால், திருநள்ளாறு,தேனுார் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி, 42; ஐ.ஆர்.பி.என்., போலீஸ். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுரக்குடி முனை சந்திப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது கார், பைக்கில் சத்தம் போட்டபடி வந்த நபர்களை கேட்ட போது, தமிழகப் பகுதி, ஆலத்துார் அம்பேத்கர் நகரை சேர்ந்த அய்யப்பன் மகன் ராம்ஜித், 20, என்பவர் கலியமூர்த்தியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து கலியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து, ராம்ஜித்தை கைது செய்தனர்.