/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விபத்து ஏற்படுத்தி காரில் தப்பியவர் ஓராண்டுக்கு பிறகு புனேவில் கைது
/
விபத்து ஏற்படுத்தி காரில் தப்பியவர் ஓராண்டுக்கு பிறகு புனேவில் கைது
விபத்து ஏற்படுத்தி காரில் தப்பியவர் ஓராண்டுக்கு பிறகு புனேவில் கைது
விபத்து ஏற்படுத்தி காரில் தப்பியவர் ஓராண்டுக்கு பிறகு புனேவில் கைது
ADDED : மே 02, 2025 04:47 AM

பாகூர்: புதுச்சேரி அருகே பைக் மீது மோதிவிட்டு காருடன் தப்பிச் சென்ற நபரை ஓராண்டுக்கு பிறகு போக்குவரத்து போலீசார் புனேவில் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
கடலுார் திருப்பாதிபுலியூர் வரதப்பன் நாயுடு தெருவைச் சேர்ந்தவர் கிரி. இவரது தந்தை முத்தையா 61 ; தாய் தாரா 57; இவர்கள் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி புதுச்சேரிக்கு பைக்கில் சென்றனர். கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லுாரி அருகே சென்றபோது அவ்வழியே சென்ற கார் ஒன்று முத்தையா ஓட்டிவந்த பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.இதில் முத்தையா மற்றும் தாரா இருவரும் படுகாயமடைந்தனர்.
புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சென்னை, செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பிரசன்னா வெங்கடேசன் , விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
எஸ்.பி., மோகன்குமார் வழிகாட்டுதலின்பேரில் தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சிறப்பு நிலை தலைமை காவலர் கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்த பிரசன்னா வெங்கடேசனை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.
விபத்தில் பாதிக்கப்பட்ட முத்தையா, தாரா ஆகியோருக்கு விபத்து நிவாரணம் கிடைக்கவும் வழிவகை செய்யதுள்ளனர்.

