தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோர்ட்டிலேயே கைவரிசை ஜாமினில் வந்தவர் மீண்டும் கைது

 கோர்ட்டிலேயே கைவரிசை ஜாமினில் வந்தவர் மீண்டும் கைது

 கோர்ட்டிலேயே கைவரிசை ஜாமினில் வந்தவர் மீண்டும் கைது


ADDED : மார் 01, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கோர்ட் பாதுகாப்பு அறையில் வைத்திருந்த இரு கத்திகளை திருடிய, ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான சொத்துக்களை பாதுகாத்து வைக்கும் அறை உள்ளது. இந்த அறையை, நேற்று முன்தினம் ஊழியர்கள் திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர். போலீஸ்காரர் மாதவன், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, பாதுகாப்பு அறையில் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த இரு கத்திகளை திருடி, தனது இடுப்பில் சொருகினார். அதனைக் கண்ட போலீஸ்காரர் மாதவன், அந்த நபரை பிடிக்க முயன்றார். உடன் அந்த நபர், கத்தியை கீழே போட்டுவிட்டு, மதில் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து, போலீஸ்காரர் மாதவன் அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

அதில், அவர் வாணரப்பேட்டையை சேர்ந்த குவார்ட்டர் (எ) ரவிகாந்த் (எ) பரத், 22, என்பதும், இவர் மீது டி.நகர் மற்றும் ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா விற்பனை, நாட்டு வெடிகுண்டு வீச்சு மற்றும் கத்தியை காட்டி மிரட்டிய வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அதில், ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷனில் உள்ள வழக்கில் நிபந்தனை ஜாமினில் வந்த இவர், தினசரி கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டு வருவதும், அவ்வாற நேற்று முன்தினம் காலை கையெழுத்திட வந்தபோது, பாதுகாப்பு அறை திறந்திருக்கவே, உள்ளே நுழைந்து கத்தியை திருடிக் கொண்டு வெளியே வந்தபோது, போலீசை பார்த்து கத்தியை போட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார், தப்பியோய குவார்ட்டர் (எ) பரத்தை கைது செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us