/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கல்விக்குழும தலைவருக்கு ஐ.சி.டி., அகாடமி விருது
/
மணக்குள விநாயகர் கல்விக்குழும தலைவருக்கு ஐ.சி.டி., அகாடமி விருது
மணக்குள விநாயகர் கல்விக்குழும தலைவருக்கு ஐ.சி.டி., அகாடமி விருது
மணக்குள விநாயகர் கல்விக்குழும தலைவருக்கு ஐ.சி.டி., அகாடமி விருது
ADDED : அக் 16, 2024 07:01 AM

புதுச்சேரி : புதுச்சேரி, மணக்குள விநாயகர் கல்விக்குழும தலைவர் தனசேகரனுக்கு, பிரிட்ஜ் மாநாட்டில் ஐ.சி.டி., அகாடமியின் 'எஜிகேஷன் சேஞ்ச்மேக்கர் விருது' வழங்கப்பட்டுள்ளது.
ஐ.சி.டி., அகாடமி ஆண்டுதோறும் புத்தாக்கம், தொலைநோக்கு மற்றும் மாணவர்திறன் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் புதிய அளவுகோல்களை அமைத்த தலைவர்களுக்கு எஜிகேஷன் சேஞ்ச்மேக்கர் விருது வழங்கி வருகிறது.
இந்தாண்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கல்விக்குழும தலைவர் தனசேகரனுக்கு ஐ.சி.டி., அகாடமியின் 'எஜிகேஷன் சேஞ்ச்மேக்கர் விருது 2024' வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஆனந்தா இன் ஓட்டலில் வளர்ச்சியின் எதிர்காலம் என்ற தலைப்பில் நடந்த பிரிட்ஜ் மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி, மணக்குள விநாயகர் கல்விக் குழும தலைவர் தனசேகருக்கு விருதினை வழங்கினார்.
புதுச்சேரி பிராந்தியத்தில் கல்வித்தரத்தை மாற்றியமைப்பதிலும், கல்வித் திறனை வளர்ப்பதிலும், முழுமையான மாணவர் மேம்பாட்டை உறுதி செய்வதிலும், மிக சிறப்பான தலைமைப் பண்பிற்காக ஐ.சி.டி., அகாடமி விருதிற்கு தனசேகரனை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.