/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கல்லூரி ஸ்மார்ட் குரு ஆப் அறிமுக விழா
/
மணக்குள விநாயகர் கல்லூரி ஸ்மார்ட் குரு ஆப் அறிமுக விழா
மணக்குள விநாயகர் கல்லூரி ஸ்மார்ட் குரு ஆப் அறிமுக விழா
மணக்குள விநாயகர் கல்லூரி ஸ்மார்ட் குரு ஆப் அறிமுக விழா
ADDED : மார் 19, 2025 05:29 AM

புதுச்சேரி : புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி வெள்ளி விழாவை முன்னிட்டு, மாணவர்கள் உருவாக்கிய ஸ்மார்ட் குரு ஆப் அறிமுக விழா நடந்தது.
கல்லுாரி அரங்கத்தில் நடந்த, விழாவிற்கு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பிஸ்னஸ் சிஸ்டம் துறையைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் வட்சன், இரண்டாம் ஆண்டு மாணவர் ஜீவேஷ் ஆகியோர் உருவாக்கிய ஸ்மார்ட் குரு ஆப் அறிமுக விழா நடந்தது.
கல்லுாரி இயக்குனர் வெங்கடாஜலபதி வரவேற்றார். துறை தலைவர் தனபாக்கியம், ஆப் செயல் விளக்கம் குறித்து விளக்கினார்.
கல்லுாரி தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், கலந்து கொண்டு ஆப்பை அறிமுகப்படுத்தி, அதனை உருவாக்கிய மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.
பொருளாளர் ராஜராஜன் கருத்துரை வழங்கினார். இணை செயலாளர் வேலாயுதம், அறங்காவலர் உறுப்பினர்கள் டாக்டர்கள் நிலா பிரியதர்ஷினி, வைஷ்ணவி ராஜராஜன், மாணவர்களை பாராட்டினர்.
ஸ்மார்ட் குரு ஆப் பொதுமக்களுக்கு விரைவில் அறிமுகமாகவுள்ளது. அதன் மூலம், பள்ளி மாணவர்கள் இதனை பரவலாக அணுக முடியும்.
மேலும், இது டிஜிட்டல் கற்றல் அனுபவங்களில் ஒரு புதிய புரட்சியையும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
முனைவர் மதுசூதனன் நன்றி கூறினார்.