sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணக்குள விநாயகர் கோவில் தேரோட்டம்

மணக்குள விநாயகர் கோவில் தேரோட்டம்

மணக்குள விநாயகர் கோவில் தேரோட்டம்


ADDED : செப் 07, 2025 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2025 06:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் வீதியுலா நேற்று நடந்தது.

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 65ம் ஆண்டு பிரம்மோற்சவம் விழா கடந்த 28 ம் தேதி துவங்கியது. தினமும் காலை, மாலைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக, கடந்த 2ம் தேதி சித்தி, புத்தி விநாயகர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

தொடர்ந்து, நேற்று 6ம் தேதி காலை 7:00 மணிக்கு தேர் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நாளை (8ம் தேதி) இரவு 8:00 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம், 14ம் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் மற்றும் பிரம்மோற்சவம் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us