மணவெளி பா.ஜ., வேட்பாளர் செல்வம் தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு
மணவெளி பா.ஜ., வேட்பாளர் செல்வம் தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 04, 2026 06:30 AM

புதுச்சேரி: மணவெளி தொகுதி பா.ஜ., வேட்பாளர் செல்வம், இடையார்பாளையம், புதுகுப்பம் பகுதிகளில் வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அவருக்கு அப்பகுதி மக்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்றனர். பா.ஜ., வேட்பாளர் செல்வம் பேசுகையில், 'இடையார்பாளையம் பகுதியில் புதிய கலையரங்கம், பள்ளிக்கூட வீதியில் சிமென்ட் சாலை, ஆற்றங்கரைக்கு புதிய தார்சாலை அமைத்து தரப்படும்.
புதுக்குப்பம் பகுதியில் சமுதாய நலக்கூடம், கடற்கரை சுற்றுலா தளமாக மாற்றப்படும். நான் எம்.எல்.ஏ.,வாக தேர்தெடுக்கப்பட்ட பிறகு இடையார்பாளையம் பகுதியில் 2 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் தொடர்ந்து கிடைத்திட வாக்குப்பதிவு எந்திரத்தில் 2வது வரிசையில் உள்ள தாமரை சின்னத்திற்கு ஓட்டளித்து தன்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
ஓட்டு சேகரிப்பின் போது பா.ஜ., - என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
