மங்கலம் தொகுதி இளைஞர்கள் தி.மு.க., வில் ஐக்கியம்
மங்கலம் தொகுதி இளைஞர்கள் தி.மு.க., வில் ஐக்கியம்
ADDED : மார் 25, 2026 11:26 PM

புதுச்சேரி: மங்கலம் தொகுதியை சேர்ந்த இளைஞர்கள் தி.மு.க., அமைப்பாளர் சிவா முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.
மங்கலம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் சிவராந்தகம் கிராமத்தை சேர்ந்த ரங்கன் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே மங்கலம் தொகுதியில் வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டி வரும் ரங்கன், மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கீழுர் கிராமத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை துவங்கினார்.
இந்நிலையில் மங்கலம் தொகுதிக்குட்பட்ட கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த யுவராஜ் தலைமையில் 50க்கும் இளைஞர்கள் தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா முன்னிலையில் இணைந்தனர்.
வில்லியனுார் தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மங்கலம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ரங்கன், தொகுதி பொறுப்பாளர் முருகதாஸ், கந்தவேல், அவைத் தலைவர் புஷ்பா, தட்சிணாமூர்த்தி, ஸ்ரீஹரி, முரளி, அய்யனார், கல்யாண், வழக்கறிஞர் சண்முகம், இளைஞர் அணி செல்வம், மாணவர் அணி அய்யப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
