/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குயிலாப்பாளையத்தில் மஞ்சு விரட்டு
/
குயிலாப்பாளையத்தில் மஞ்சு விரட்டு
ADDED : ஜன 18, 2024 03:49 AM

வானுார்: ஆரோவில் அருகே நடந்த மஞ்சு விரட்டு நிகழ்ச்சி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்தது.
ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடந்தது.
ஆரோவில் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் வீடுகளில் வளர்க்கும் மாடுகளுடன் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியையொட்டி, முத்து மாரியம்மன், பெருமாள், விநாயகர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் மந்தைவெளியில் எழுந்தருளினர்.
மாடுகள் சீறிப்பாய்ந்த போது, நிலத்தில் விளைந்த மா, புளி, வாழை போன்ற விளை பொருட்களை வீசி மகிழ்ந்தனர். ஆரோவில் பகுதியில் வசிக்கும் வெளிநாட்டு பெண்கள் தமிழகத்தின் பாரம்பரிய உடையான புடவை, பாவாடை, தாவணி அணிந்திருந்தனர். அவர்களுக்கு உள்ளூர் மக்கள் கரும்பு, பொங்கல் வழங்கி காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.