/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மன்மோகன் சிங் மறைவு கவர்னர், முதல்வர் இரங்கல்
/
மன்மோகன் சிங் மறைவு கவர்னர், முதல்வர் இரங்கல்
ADDED : டிச 27, 2024 05:52 AM
புதுச்சேரி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை யொட்டி, கவர்னர், முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கவர்னர் கைலாஷ்நாதன் இரங்கல் செய்தி:
முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங், உடல் நலக்குறைவால் இறந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை தந்துள்ளது.
அவர் நாட்டின் உயர்ந்த பதவிகளை வகித்தார். அனைவராலும் போற்றப்பட்ட தலைவராக திகழ்ந்தார்.
நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காவும், பாராளுமன்றத்திலும், வெளியிலும், அவர் மேற்கொண்ட செயல்பாடுகள் எல்லோராலும் பாராட்டப்படுகிறது.
பேராசிரியராகவும், பொருளாதார நிபுணராகவும், ரிசர்வ் வங்கி தலைவராக ஆற்றிய பணிகள் நாடு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.
இவ்வாறு கவர்னர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ரங்கசாமி இரங்கல் செய்தி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார வல்லுனராகவும், சிற்பியாகவும் திகழ்ந்தவர்.
10 ஆண்டுகள் பிரதமராகவும், சாமானிய மக்களின் வாழ்க்கை உயர வேண்டும் என்பதற்காக பல திட்டங்களையும், பொருளாதார சீர்திருத்தங்களையும் கொண்டு வந்தவர்.
அவரை இழந்து வாடும், குடும்பத்தினருக் கும், அவரை சார்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

