/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாரல் வித்யா மந்தீர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
/
மாரல் வித்யா மந்தீர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
ADDED : மே 12, 2025 02:13 AM

புதுச்சேரி: கோர்க்காடு மாரல் வித்யா மந்தீர் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியளவில் மாணவி பிரீத்தா 527 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். மாணவிகள் அகல்யா 526 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், வாசவி 524 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம், ஜோதிகா 514 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடம் பிடித்தனர்.
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் மாணவி பிரீத்தா சென்டம் எடுத்தார். பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பள்ளி தாளாளர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர் ரத்தனபிரியா ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தாளாளர் ராஜேந்திரன் கூறுகையில், 'எமது பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 250 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும், அவர்கள் விரும்பிய பாடம் கொடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி அடைய வைப்பதோடு, சாதாரண மாணவர்களையும் சாதனையாளர்களாக உருவாக்குகிறோம்.இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு நன்றி' என்றார்.