/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதி அரசு பள்ளியில் மாரத்தான் போட்டி
/
பாரதி அரசு பள்ளியில் மாரத்தான் போட்டி
ADDED : ஆக 30, 2025 12:18 AM

பாகூர்: பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியில், தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, பிட் இந்தியா சார்பில், மாரத்தான் போட்டி நடந்தது.
மாரத்தான் போட்டி துவக்க நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் சுதா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அமலி முன்னிலை வகித்தார். விரிவுரையாளர் ரேவதி வரவேற்றார். பாகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜீவபாரதி, பள்ளி கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோர் மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கிய இப்போட்டியில், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு, பாகூர் சிவன் கோவில், வட்டாட்சியர் அலுவலகம், கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி விரிவுரையாளர் முரளிதரன், உடற்கல்வி ஆசிரியை சந்தியா ஆகியோர் செய்திருந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விரிவுரையாளர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

