/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்கலைக்கழகத்தில் மாரத்தான்; மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு
/
பல்கலைக்கழகத்தில் மாரத்தான்; மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு
பல்கலைக்கழகத்தில் மாரத்தான்; மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு
பல்கலைக்கழகத்தில் மாரத்தான்; மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு
ADDED : பிப் 17, 2025 05:51 AM

புதுச்சேரி; பல்கலைக்கழகத்தில் நடந்த மாரத்தானில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு வணிக துறை, மேலாண்மை புலம் சார்பில், வரும் 19, 20, 21 ஆகிய மூன்று நாள்கள் தொழில் நிறுவனங்கள்-கல்வி நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்ச்சி குளோபிஸ் என்ற பெயரில் துவங்க உள்ளது. அதையொட்டி பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியும், மாரத்தான் ஓட்டமும் நடந்தது.
பல்கலைக்கழக துணைவேந்தர் தரணிக்கரசு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு மாரத்தானை துவக்கி வைத்தார். இதில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்று நடும் பணியையும் துவக்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பன்னாட்டு வணிக துறை தலைவர் அருள், ஒருங்கிணைப்பாளர் இளங் கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.