/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரோவில்லில் இன்று மாரத்தான் ஓட்டம்
/
ஆரோவில்லில் இன்று மாரத்தான் ஓட்டம்
ADDED : பிப் 17, 2024 11:13 PM
வானுார்: ஆரோவில்லில், இன்று 18ம் தேதி மாரத்தான் ஓட்டம் நடக்கிறது.
இது குறித்து ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் ஜெயந்தி ரவி, துணைச் செயலாளர் சொர்ணாம்பிகா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் ஒற்றுமை, உடல் வலிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று மற்றும் கிரவுன் சாலை திட்டப்பணிகள் காரணமாக மாரத்தான் ஓட்டம் நடத்தப் படவில்லை.
14வது ஆண்டாக நாளை (இன்று 18ம் தேதி) மாரத்தான் ஓட்டத்திற்கு ஆரோவில்லில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விசிட்டர் சென்டர் எதிரில் காலை 6:15 மணிக்கு, போட்டி துவங்குகிறது.
இப்போட்டியில் 689 பெண்கள், 2293 ஆண்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். 42 கி.மீ., பிரிவில் 151 பேரும், 21 கி.மீ., பிரிவில் 1,287 பேரும், 10 கி.மீ., பிரிவில் 1544 பேரும், 5 கி.மீ., பிரிவில் குழந்தைகள், பெற்றோர்கள், முதியவர்கள் பங்கேற்கிறார்கள்.
போட்டியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஆரோவில் வாசிகள், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என 2,982 பேர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.