ADDED : ஜன 16, 2026 07:07 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: கண்ணபிரான் நாம சங்கீர்த்தன கைங்கரிய சபாவின் 80வது மார்கழி உற்சவ நிறைவு விழா நேற்று நடந்தது.
பிள்ளைத்தோட்டம், கங்கையம்மன் கோவில், ஆனந்த பாண்டுரங்கன் சன்னதியில், கண்ணபிரான் நாம சங்கீர்த்தன கைங்கரிய சபாவின் 80வது மார்கழி உற்சவ நிறைவு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, பஜனை குழு தலைவர் தண்டபாணி தலைமை தாங்கி, மார்கழி மாதம் முழுதும் நடந்த பஜனையில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு, பரிசுகள் வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக தொழில்திபர் கண்ணன், துணைத் தலைவர் ஷண்முகம், பொருளாளர் ராஜா, செயலாளர் மணி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
