UPDATED : அக் 12, 2026 07:56 PM
ADDED : அக் 12, 2026 07:22 PM

புதுச்சேரி: காட்டேரிக்குப்பம் சி.எஸ்.ஆர். நிதி உதவியுடன் புதுப்பிக்கப்பட்ட மாரியம்மன் கோவில் குளத்தை கவர்னர் கைலாஷ்நாதன் திறந்து வைத்தார்.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் காட்டேரிகுப்பத்தில் ‘வேர்ல்பூல் ஆப் இந்தியா லிமிடெட் கம்பெனியின் சி.எஸ்.ஆர். நிதி உதவியுடன் ‘நமது தோள்கள் அறக்கட்டளை’ மூலம் புதுப்பிக்கப்பட்ட மாரியம்மன் கோவில் குளம் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று, புதுப்பிக்கப்பட்ட மாரியம்மன் கோயில் குளத்தை திறந்து வைத்து, உள்ளூர் மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் வரவேற்றார்.
விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன் பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்தழகன், கலியபெருமாள், உள்ளாட்சித் துறை செயலர் விக்ராந்த் ராஜா, இயக்குநர் ஆதர்ஷ் உள்ளிட்ட கம்பெனி நிர்வாகிகள், அறக்கட்டளை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கொம்யூன் பஞ்சாயத்து மூலம் ‘ஹர் கர் ஜல்’ திட்டத்தில் குடிநீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து, குளத்தில் கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
