/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
/
பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
ADDED : பிப் 05, 2026 05:30 AM
பாகூர்: மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், நடந்து வரும் தற்காப்பு கலை பயிற்சி முகாமில், மாணவிகள் ஆர்வமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.
மணப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில், பள்ளி கல்வி துறை சமக்ர சிக் ஷா சார்பில், ராணி லட்சுமி பாய் ஆத்ம ரக் ஷ பிரஷிக்சம் திட்டத்தின் கீழ், மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பு மற்றும் உடல் வலிமையை அதிகரிக்கும் நோக்கில், தற்காப்பு கலை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் நடந்து வரும் இப்பயிற்சி முகாமில், கராத்தே, கூடோ, ஸ்குவாஸ் தற்காப்பு கலையில் உள்ள ரவுண்ட் ஆஸ், (காலால் உதைத்தல்) குத்துதல், எதிரியின் தாக்குதலை தடுத்து துாக்கி எறிதல், லாக் டெக்னிக், கையில் இருக்கும் பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அவசர நேரங்களில், தன்னை தானே தற்காத்து கொள்ளுதல் குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கராத்தே சங்க மாநில பொதுச் செயலாளர் வளவன், இணை செயலாளர் பாலச்சந்தர் மேற்பார்வையில், பாகூர் கொம்யூன் மூத்த பயிற்சியாளர் ஸ்ரீஜா, தினசரி பள்ளி வேலை நாட்களில் மாலை ஒரு மணி நேரம், மாணவிகளுக்கு தற்காப்பு கலையை பயிற்றுவித்து வருகிறார்.
நேற்று முன்தினம் நடந்த தற்காப்பு பயிற்சியை, தலைமையாசிரியர் கணேசன், ஆசிரியர்கள் கலைச்செல்வி, முருகன், பொறுப்பாசிரியர் தமிழரசி, சாந்தி, கவிதா, முருகன் ஆகியோர் பார்வையிட்டு மாணவிகளுக்கு ஊக்கம் அளித்தனர்.

