/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 5 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள்; மார்ட்டின் குழுமம் வழங்கல்
/
ரூ. 5 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள்; மார்ட்டின் குழுமம் வழங்கல்
ரூ. 5 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள்; மார்ட்டின் குழுமம் வழங்கல்
ரூ. 5 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள்; மார்ட்டின் குழுமம் வழங்கல்
ADDED : டிச 16, 2024 05:39 AM

புதுச்சேரி: பெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு ரூ. 5 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்க மார்ட்டின் குழுமம் முடிவு செய்தது.
இதில் 70 ஆயிரம் குடும்பத்திற்கு, அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் தொகுப்பு விநியோகிக்கும் பணி துவங்கியது.
நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் நேற்று நடந்தது. மார்ட்டின் குழுமத்தின் இயக்குநர் லீமாரோஸ் மார்ட்டின் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆகியோர், நிவாரண பொருட்கள் ஏற்றி சென்ற லாரிகளை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். ஜான்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், பா.ஜ., ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கரன், அங்காளன், மற்றும் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே கலந்து கொண்டனர்.
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறுகையில்;
பெஞ்சல் புயலால் புதுச்சேரி மற்றும் தமிழகம் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி துவங்கி உள்ளது. தற்போது 20 லாரிகளில் நிவாரண பொருள் வந்துள்ளது. இன்னும் 60 லாரிகள் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி முழுதும் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என கூறினார்.

